ரஷ்யாவின் இராணுவ தளவாடங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உக்ரைனின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வைல்ட்பெர்ரீஸ் நிறுவனத்தின் கிடங்கு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரியவர்த்தக நிறுவனங்களில் ஒன்றான வைல்ட்பெர்ரீஸின் தளவாட வலையமைப்பு, ரஷ்யாவின் இராணுவ விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடையதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நிறுவனத்தின் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதல், உக்ரைன் ரஷ்யாவின் தளவாடக் கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைத்து வருவதற்கான மற்றொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், ரஷ்யாவின் முக்கிய வர்த்தக மற்றும் விநியோக மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இராணுவ தளங்களைத் தாண்டி, பொருளாதார மற்றும் தளவாடக் கட்டமைப்புகளையும் நோக்கி விரிவடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன
ரஷ்யாவின் வர்த்தக சாம்ராஜ்யம் தரைமட்டம்-குறிவைத்து தாக்கிய உக்ரைன் ரஷ்யாவின் இராணுவ தளவாடங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உக்ரைனின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வைல்ட்பெர்ரீஸ் நிறுவனத்தின் கிடங்கு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் மிகப்பெரியவர்த்தக நிறுவனங்களில் ஒன்றான வைல்ட்பெர்ரீஸின் தளவாட வலையமைப்பு, ரஷ்யாவின் இராணுவ விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடையதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.இந்த நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நிறுவனத்தின் கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதல், உக்ரைன் ரஷ்யாவின் தளவாடக் கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைத்து வருவதற்கான மற்றொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், ரஷ்யாவின் முக்கிய வர்த்தக மற்றும் விநியோக மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இராணுவ தளங்களைத் தாண்டி, பொருளாதார மற்றும் தளவாடக் கட்டமைப்புகளையும் நோக்கி விரிவடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன