மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் இந்நிலையத்தில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளும் இன்றி மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையேற்றுள்ள டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் குணசிங்கம் சுகுணன் இன்று தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பதவி உயர்வுடனான இடமாற்றம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடியினை சொந்த இடமாக கொண்ட குணசிங்கம் சுகுணன் களுவாஞ்சிகுடி,கல்முனை ஆதார வைத்தியசாலை,வவுனியாக பொது வைத்தியசாலை ஆகியவற்றின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கடமையாற்றிவந்த நிலையில் நிரந்தர பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று தமது கடமையினை பொறுப்பேற்க வந்த பணிப்பாளருக்கு வைத்தியசாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்ட பணிப்பாளர்,வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்தார்.
வழிபாடுகளை தொடர்ந்து வைத்தியசாலையில் பணிப்பாளருக்கான வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியலிங்கம்,மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் உட்பட வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,மருந்தக உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள்,கணக்காளர்கள்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் சிறிசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகரசபையின் முதல்வரினால் பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டதுடன் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
தமது கடமைக்காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மக்களுக்கு வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நிரந்தர பணிப்பாளராகத் தான் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுகாதார அமைச்சினால் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்ட போட்டி நேர்முகத் தேர்வின் மூலம் அதிக புள்ளிகளைப் பெற்று இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனது 7 ஆண்டு கால சேவைக் காலத்தில் குறுகிய காலத் திட்டங்களைத் தவிர்த்து, வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் நீண்ட காலத் திட்டங்களை 3 முதல் 6 மாத கால ஆய்வுக்குப் பின் செயல்படுத்தப் போவதாக உறுதியளித்தார்.
ஏழை மக்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் இந்நிலையத்தில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளும் இன்றி மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சியாக, மருத்துவப் பீடத்திற்கான 7 மாடிக் கட்டிடம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை பிரிவிற்கான மேல் மாடிக் கட்டிடப் பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறைவு செய்யப்படும் எனக் கூறியதுடன், கார்டியோ ஆஞ்சியோகிராம் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகிய நவீன மருத்துவக் கருவிகளை விரைவாகக் கொண்டுவந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நோயாளிகள் தேவையின்றி மணித்தியாலக்கணக்கில் காத்திருப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தொழில்நுட்ப முறைமை இங்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பணியாளர்களின் தொழிற்திறனை அதிகரித்து, மருத்துவப் பீடத்துடனான தொடர்புகள் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியில், ஒருங்கிணைந்த கூட்டுப் பணியின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை இலங்கையிலேயே மிகச்சிறந்த போதனா வைத்தியசாலையாக மாற்றுவதே தனது முதன்மை நோக்கம் என அவர் உறுதியளித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் இந்நிலையத்தில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளும் இன்றி மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையேற்றுள்ள டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் குணசிங்கம் சுகுணன் இன்று தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பதவி உயர்வுடனான இடமாற்றம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.களுவாஞ்சிகுடியினை சொந்த இடமாக கொண்ட குணசிங்கம் சுகுணன் களுவாஞ்சிகுடி,கல்முனை ஆதார வைத்தியசாலை,வவுனியாக பொது வைத்தியசாலை ஆகியவற்றின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கடமையாற்றிவந்த நிலையில் நிரந்தர பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று தமது கடமையினை பொறுப்பேற்க வந்த பணிப்பாளருக்கு வைத்தியசாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்ட பணிப்பாளர்,வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்தார்.வழிபாடுகளை தொடர்ந்து வைத்தியசாலையில் பணிப்பாளருக்கான வரவேற்பு கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியலிங்கம்,மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் உட்பட வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,மருந்தக உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள்,கணக்காளர்கள்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் சிறிசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது மாநகரசபையின் முதல்வரினால் பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டதுடன் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.தமது கடமைக்காலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மக்களுக்கு வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தெரிவித்தார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நிரந்தர பணிப்பாளராகத் தான் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.இலங்கை சுகாதார அமைச்சினால் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்ட போட்டி நேர்முகத் தேர்வின் மூலம் அதிக புள்ளிகளைப் பெற்று இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனது 7 ஆண்டு கால சேவைக் காலத்தில் குறுகிய காலத் திட்டங்களைத் தவிர்த்து, வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் நீண்ட காலத் திட்டங்களை 3 முதல் 6 மாத கால ஆய்வுக்குப் பின் செயல்படுத்தப் போவதாக உறுதியளித்தார்.ஏழை மக்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் இந்நிலையத்தில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளும் இன்றி மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உள்கட்டமைப்பு வளர்ச்சியாக, மருத்துவப் பீடத்திற்கான 7 மாடிக் கட்டிடம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை பிரிவிற்கான மேல் மாடிக் கட்டிடப் பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறைவு செய்யப்படும் எனக் கூறியதுடன், கார்டியோ ஆஞ்சியோகிராம் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகிய நவீன மருத்துவக் கருவிகளை விரைவாகக் கொண்டுவந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், நோயாளிகள் தேவையின்றி மணித்தியாலக்கணக்கில் காத்திருப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தொழில்நுட்ப முறைமை இங்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.அத்துடன், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பணியாளர்களின் தொழிற்திறனை அதிகரித்து, மருத்துவப் பீடத்துடனான தொடர்புகள் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இறுதியில், ஒருங்கிணைந்த கூட்டுப் பணியின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை இலங்கையிலேயே மிகச்சிறந்த போதனா வைத்தியசாலையாக மாற்றுவதே தனது முதன்மை நோக்கம் என அவர் உறுதியளித்தார்.