கிளிநொச்சி மாவட்டத்தில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, புதிய இழப்பீட்டு விண்ணப்பங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதுவரை மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிப்புக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இதுவரை இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 10,800 குடும்பங்கள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ளதுடன், அவற்றைப் பூர்த்தி செய்து கிராம சேவையாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, காணாமல் போனோர் குடும்பங்களாக 1,225 குடும்பங்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் முதற்கட்டமாக 685 குடும்பங்கள் தலா 2 இலட்சம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுள்ளன. வன்செயல்கள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் கடுங்காயமடைந்தவர்கள் என இதுவரை 4,999 பேருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் அல்லது விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் 10,800 குடும்பங்களுக்கு மீண்டும் இழப்பீடு பெற வாய்ப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது, புதிய இழப்பீட்டு விண்ணப்பங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிப்புக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இதுவரை இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 10,800 குடும்பங்கள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ளதுடன், அவற்றைப் பூர்த்தி செய்து கிராம சேவையாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதேவேளை, காணாமல் போனோர் குடும்பங்களாக 1,225 குடும்பங்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் முதற்கட்டமாக 685 குடும்பங்கள் தலா 2 இலட்சம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுள்ளன. வன்செயல்கள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் கடுங்காயமடைந்தவர்கள் என இதுவரை 4,999 பேருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் அல்லது விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.