• Nov 06 2026

கர்ப்பிணிப் பசுவின் வயிற்றிலிருந்த கன்றை வெளியே வீசிய கொடூரம்! யாழில் சிக்கிய இருவர் யார்?

Chithra / Nov 4th 2026, 12:54 pm
image


யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் நிறைமாத கர்ப்பிணிப் பசு உட்பட இரண்டு பசுக்கள் சட்டவிரோதமாக இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை புங்குடுதீவு - மடத்துவெளி வயலூர் முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணியில் இடம்பெற்றுள்ளது.


பிரதான வீதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த காணிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், நிறைமாத கர்ப்பிணிப் பசு ஒன்றையும் மற்றுமொரு பசுவையும் இறைச்சிக்காகக் கொன்றுள்ளனர்.


இதன்போது, கர்ப்பிணிப் பசுவின் வயிற்றிலிருந்த முழுமையான உடலமைப்பைக் கொண்ட கன்றை வெளியே எடுத்து வீசிய பின்னர், பசுவை இறைச்சியாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்ட சந்தேகநபர்கள், கொல்லப்பட்ட மற்றைய பசுவைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


அத்துடன், சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக இறைச்சியாக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த மற்றுமொரு பசுவை மடத்துவெளி ஜே/23 கிராம அலுவலர் ச. சிறீதரன், தீவகம் சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளன், புங்குடுதீவு உலக மைய அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் கஜேந்திரன் மற்றும் பொதுமகன் ஒருவர் இணைந்து மீட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கே. வினோத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.


இதன்போது, புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவு பாணாவிடை சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள மீன் வாடி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.


அங்கு மாடுகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான கேபிள் கம்பிகளும், மாடுகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, அங்கிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த மீன் வாடியின் உரிமையாளர் நயினாதீவைச் சேர்ந்த பாட்சா எனப்படும் நபர் என்றும், அவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவில் திருமணம் செய்துள்ள அவருடைய இரண்டு மகன்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, பாட்சா எனப்படும் நபர் கடந்த 2025 டிசம்பர் 31ஆம் திகதி புங்குடுதீவிலிருந்து மோட்டார் சைக்கிளில் மீன் கொண்டு செல்லும் பெட்டிக்குள் மறைத்து வைத்து 35 கிலோகிராம் மாட்டிறைச்சியைக் கடத்திச் சென்றபோது, வேலணை அராலிச் சந்தியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மீன் வியாபாரிகள் என்ற போர்வையில், பாட்சாவும் அவரது பிள்ளைகளும் பல வருடங்களாக ஊரதீவு பாணாவிடை சிவன் கோவிலுக்கு அருகில் மீன் வாடியை நடத்தி வந்ததாகவும், அங்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


குறித்த மீன் வாடியை அகற்றுமாறு பொதுமக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்களும் அரச அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கர்ப்பிணிப் பசுவின் வயிற்றிலிருந்த கன்றை வெளியே வீசிய கொடூரம் யாழில் சிக்கிய இருவர் யார் யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் நிறைமாத கர்ப்பிணிப் பசு உட்பட இரண்டு பசுக்கள் சட்டவிரோதமாக இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை புங்குடுதீவு - மடத்துவெளி வயலூர் முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணியில் இடம்பெற்றுள்ளது.பிரதான வீதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த காணிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், நிறைமாத கர்ப்பிணிப் பசு ஒன்றையும் மற்றுமொரு பசுவையும் இறைச்சிக்காகக் கொன்றுள்ளனர்.இதன்போது, கர்ப்பிணிப் பசுவின் வயிற்றிலிருந்த முழுமையான உடலமைப்பைக் கொண்ட கன்றை வெளியே எடுத்து வீசிய பின்னர், பசுவை இறைச்சியாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்ட சந்தேகநபர்கள், கொல்லப்பட்ட மற்றைய பசுவைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.அத்துடன், சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக இறைச்சியாக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த மற்றுமொரு பசுவை மடத்துவெளி ஜே/23 கிராம அலுவலர் ச. சிறீதரன், தீவகம் சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளன், புங்குடுதீவு உலக மைய அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் கஜேந்திரன் மற்றும் பொதுமகன் ஒருவர் இணைந்து மீட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கே. வினோத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.இதன்போது, புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவு பாணாவிடை சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள மீன் வாடி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.அங்கு மாடுகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான கேபிள் கம்பிகளும், மாடுகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, அங்கிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீன் வாடியின் உரிமையாளர் நயினாதீவைச் சேர்ந்த பாட்சா எனப்படும் நபர் என்றும், அவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவில் திருமணம் செய்துள்ள அவருடைய இரண்டு மகன்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, பாட்சா எனப்படும் நபர் கடந்த 2025 டிசம்பர் 31ஆம் திகதி புங்குடுதீவிலிருந்து மோட்டார் சைக்கிளில் மீன் கொண்டு செல்லும் பெட்டிக்குள் மறைத்து வைத்து 35 கிலோகிராம் மாட்டிறைச்சியைக் கடத்திச் சென்றபோது, வேலணை அராலிச் சந்தியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மீன் வியாபாரிகள் என்ற போர்வையில், பாட்சாவும் அவரது பிள்ளைகளும் பல வருடங்களாக ஊரதீவு பாணாவிடை சிவன் கோவிலுக்கு அருகில் மீன் வாடியை நடத்தி வந்ததாகவும், அங்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.குறித்த மீன் வாடியை அகற்றுமாறு பொதுமக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்களும் அரச அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement