• Nov 06 2026

நாகப்பட்டினம் - காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

Ziya / Nov 5th 2026, 3:48 pm
image

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இன்று காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்திலேயே இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது 


 மேலும் அவர்கள் தெரிவிக்கையில்


இதன் முக்கிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:


நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் ₹5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.


பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.


30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன:


  5 கிலோ: ₹1,500 (LKR 5,250 / USD 16)

  10 கிலோ: ₹2,500 (LKR 8,750 / USD 26)

  30 கிலோ: ₹6,000 (LKR 21,000 / USD 63)


நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம்.


 நாகப்பட்டினம் - காங்கேசனத்துறை (Economy):

   பெரியவர்கள் (Adult): ₹5,500 | LKR 19,250 | USD 58

   குழந்தைகள் (Child): ₹5,000 | LKR 17,500 | USD 53

 காங்கேசனத்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco):

   Economy - பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58

   Economy - குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53

   Pre Eco - பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64

   Pre Eco - குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58


நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் னவும் கடந்த வருடம்போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.இன்று காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்திலேயே இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது  மேலும் அவர்கள் தெரிவிக்கையில்இதன் முக்கிய அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் ₹5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன:  5 கிலோ: ₹1,500 (LKR 5,250 / USD 16)  10 கிலோ: ₹2,500 (LKR 8,750 / USD 26)  30 கிலோ: ₹6,000 (LKR 21,000 / USD 63)நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம். நாகப்பட்டினம் - காங்கேசனத்துறை (Economy):   பெரியவர்கள் (Adult): ₹5,500 | LKR 19,250 | USD 58   குழந்தைகள் (Child): ₹5,000 | LKR 17,500 | USD 53 காங்கேசனத்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco):   Economy - பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58   Economy - குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53   Pre Eco - பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64   Pre Eco - குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் னவும் கடந்த வருடம்போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement