• Nov 05 2026

வர்த்தகர்களுக்கு அம்பாறை மாவட்ட செயலகம் விசேட அறிவித்தல்

Ziya / Nov 5th 2026, 5:12 pm
image

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும் மற்றும் சேவைகளும் சட்டத்தின் பிரகாரம் 2026/2027 ஆம் ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களைப் பரிசோதித்து முத்திரையிடுவதற்கான வர்த்தகர்களுக்கான அறிவித்தலை, அம்பாறை மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் பிரிவு   வெளியிட்டுள்ளது.


மேற்குறிப்பிட்ட சட்டத்தின் 22 வது பிரிவின் பிரகாரம், நிறுவனங்கள், அளவைகள் அல்லது நிறுக்கும்/அளக்கும் உபகரணங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசோதனை செய்யப்படல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.


எனவே, 2026 நவம்பர் 09, 10 ஆகிய திகதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் போன்றவற்றுக்கு அறிவிப்பதுடன், மேற்குறிப்பிட்ட சட்டத்தின் 37 வது பிரிவின்படி 12 மாத கால இடைவெளியில் முத்திரையிடப்படாத அளவைகள் அல்லது நிறுக்கும்/அளக்கும் உபகரணங்களைப் பாவித்தல் அல்லது விற்பனைக்காக வெளிக்காட்டி வைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும் நவம்பர் 9 ,10 திகதிகளில் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை கலாச்சார மண்டபத்திலும், நவம்பர் 25 திகதி அம்பாறை மாவட்ட செயலகத்திலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முத்திரை இடும் செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், முத்திரையைப் பதிக்கும் நிலை குறித்த விபரங்கள் அறிவிக்கப்படுவதுடன், தேவைப்படின் நீதிமன்றச் சான்றுகளுக்காகப் பயன்பாட்டாளர்களின் பெயர், விலாசம் மற்றும் உபகரண விபரங்களை "நிலைப் பொறுப்பதிகாரி, அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு, மாவட்டச் செயலகம், அம்பாறை" எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மேலதிக மாவட்டச் செயலாளர் மற்றும் உதவிச் கண்காணிப்பாளர் ஆகியோரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

வர்த்தகர்களுக்கு அம்பாறை மாவட்ட செயலகம் விசேட அறிவித்தல் 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும் மற்றும் சேவைகளும் சட்டத்தின் பிரகாரம் 2026/2027 ஆம் ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களைப் பரிசோதித்து முத்திரையிடுவதற்கான வர்த்தகர்களுக்கான அறிவித்தலை, அம்பாறை மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் பிரிவு   வெளியிட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட சட்டத்தின் 22 வது பிரிவின் பிரகாரம், நிறுவனங்கள், அளவைகள் அல்லது நிறுக்கும்/அளக்கும் உபகரணங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசோதனை செய்யப்படல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.எனவே, 2026 நவம்பர் 09, 10 ஆகிய திகதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் போன்றவற்றுக்கு அறிவிப்பதுடன், மேற்குறிப்பிட்ட சட்டத்தின் 37 வது பிரிவின்படி 12 மாத கால இடைவெளியில் முத்திரையிடப்படாத அளவைகள் அல்லது நிறுக்கும்/அளக்கும் உபகரணங்களைப் பாவித்தல் அல்லது விற்பனைக்காக வெளிக்காட்டி வைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் நவம்பர் 9 ,10 திகதிகளில் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மருதமுனை கலாச்சார மண்டபத்திலும், நவம்பர் 25 திகதி அம்பாறை மாவட்ட செயலகத்திலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முத்திரை இடும் செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், முத்திரையைப் பதிக்கும் நிலை குறித்த விபரங்கள் அறிவிக்கப்படுவதுடன், தேவைப்படின் நீதிமன்றச் சான்றுகளுக்காகப் பயன்பாட்டாளர்களின் பெயர், விலாசம் மற்றும் உபகரண விபரங்களை "நிலைப் பொறுப்பதிகாரி, அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு, மாவட்டச் செயலகம், அம்பாறை" எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மேலதிக மாவட்டச் செயலாளர் மற்றும் உதவிச் கண்காணிப்பாளர் ஆகியோரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement