• Nov 05 2026

யாழில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்!

Ziya / Nov 5th 2026, 3:13 pm
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம்(04.11.2026)  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அனர்த்த அபாயங்களைக் குறைத்தல் மற்றும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.


இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமை உரையைத் தொடர்ந்து, வளிமண்டலவியல் திணைக்களத்தின் வளிமண்டலவியலாளர் Zoom இணையவழி செயலி ஊடாகக் கலந்துகொண்டு, வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை தொடர்பான எதிர்வுகூறல்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விளக்கமளித்தார்.


குறிப்பாக, நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 331 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, அனர்த்த காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள், முன்னாயத்த ஏற்பாடுகள் மற்றும் துறைசார் தேவைகள் தொடர்பாகத் திணைக்களத் தலைவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.


கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:


01.பாதுகாப்பு நிலையங்களின் முன்னாயத்தம் :


யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 255 பாதுகாப்பு நிலையங்களின் தேவைகள் மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. கிராம அலுவலர்களின் தலைமையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், அரசாங்கச் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


02.கிராம மட்ட உதவி மற்றும் உணவு விநியோகம் :


பாதுகாப்பு நிலையங்கள் உள்ளிட்ட கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்படும் உதவிச் செயற்பாடுகள் கிராம அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசாங்கச் சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவே உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது. கிராம மட்டங்களில் சமைத்த உணவுகளை வழங்கும்போது சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு சமூக மட்ட அமைப்புகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


03.ஆபத்தான மரங்களை அகற்றுதல் :


பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களைக் கூட்டி ஆராய்ந்து, அனர்த்த அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.


04.உவர் நீர் தடுப்பணைகளின் நீர் முகாமைத்துவம் :


அராலி, தொண்டைமானாறு மற்றும் அரியாலை உவர் நீர் தடுப்பணைகளிலிருந்து வெளியேறும் நீர் கடலுக்குச் சென்று வீணாகாமல் உரிய அளவில் தேக்கி வைப்பதன் மூலம் அப்பகுதிகளில் நன்னீர் மட்டத்தைப் பேணுவதுடன், அதேவேளை வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டது.


05.தீவுப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான முன்னாயத்தம் :


நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களைக் கடந்த கர்ப்பிணித் தாய்மார்கள், அனர்த்த காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் போக்குவரத்தைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலோ தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் பிரசவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டது.


06.எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் :


கடந்த வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு, இந்நோயைத் தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, வயல் நிலங்களில் பணியாற்றுவோர் தத்தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அணுகி, எலிக்காய்ச்சல் தடுப்புக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டது.


இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி), பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்,  முப்படையினர் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.


யாழில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம்(04.11.2026)  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அனர்த்த அபாயங்களைக் குறைத்தல் மற்றும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமை உரையைத் தொடர்ந்து, வளிமண்டலவியல் திணைக்களத்தின் வளிமண்டலவியலாளர் Zoom இணையவழி செயலி ஊடாகக் கலந்துகொண்டு, வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை தொடர்பான எதிர்வுகூறல்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விளக்கமளித்தார்.குறிப்பாக, நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 331 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, அனர்த்த காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள், முன்னாயத்த ஏற்பாடுகள் மற்றும் துறைசார் தேவைகள் தொடர்பாகத் திணைக்களத் தலைவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:01.பாதுகாப்பு நிலையங்களின் முன்னாயத்தம் :யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 255 பாதுகாப்பு நிலையங்களின் தேவைகள் மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. கிராம அலுவலர்களின் தலைமையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், அரசாங்கச் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.02.கிராம மட்ட உதவி மற்றும் உணவு விநியோகம் :பாதுகாப்பு நிலையங்கள் உள்ளிட்ட கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்படும் உதவிச் செயற்பாடுகள் கிராம அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசாங்கச் சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவே உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது. கிராம மட்டங்களில் சமைத்த உணவுகளை வழங்கும்போது சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு சமூக மட்ட அமைப்புகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.03.ஆபத்தான மரங்களை அகற்றுதல் :பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களைக் கூட்டி ஆராய்ந்து, அனர்த்த அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.04.உவர் நீர் தடுப்பணைகளின் நீர் முகாமைத்துவம் :அராலி, தொண்டைமானாறு மற்றும் அரியாலை உவர் நீர் தடுப்பணைகளிலிருந்து வெளியேறும் நீர் கடலுக்குச் சென்று வீணாகாமல் உரிய அளவில் தேக்கி வைப்பதன் மூலம் அப்பகுதிகளில் நன்னீர் மட்டத்தைப் பேணுவதுடன், அதேவேளை வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டது.05.தீவுப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான முன்னாயத்தம் :நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களைக் கடந்த கர்ப்பிணித் தாய்மார்கள், அனர்த்த காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் போக்குவரத்தைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலோ தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் பிரசவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டது.06.எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் :கடந்த வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு, இந்நோயைத் தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, வயல் நிலங்களில் பணியாற்றுவோர் தத்தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அணுகி, எலிக்காய்ச்சல் தடுப்புக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டது.இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி), பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்,  முப்படையினர் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement