மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு திருத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சந்திவெளி - திகிலிவெட்டை படகுப்பாதை சேவை மீண்டும் புதன்கிழமை (05.11.2026) முதல் வழைமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சு.சுதாகரன் தெரிவித்தார்.
பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த நாட்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திவெளி திகிலிவெட்டை படகுப்பாதை சேவை திருத்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்திவெளி - திகிலிவெட்டை படகுப்பாதையின் திருத்தப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இத்திருத்தப் பணிகள் பிரதேச சபையின் நிதி மற்றும் தவிசாளர் சு.சுதாகரன் அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு பாதையின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளன.
இப்பதைப் பயணத்தில் மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம். இப்பாதையில் தினமும் பயணம் செய்யும் மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பே எமக்கு மிகவும் இன்றியமையாதது.
மக்கள் பாதுகாப்புடன் தொடர்புடைய இப்பணியில் எவ்வித விபத்துக்களோ அல்லது ஆபத்துக்களோ ஏற்படாத வண்ணம், நேரடி கண்காணிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் தவிசாளர் என்ற ரீதியில் எனக்கே முழுப்பொறுப்பு உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் இதில் இட்டுள்ளேன்.
எதிர்வருகின்ற வெள்ளம் போன்ற அனர்த்த காலங்களில் கிரான் பாலத்தினூடான போக்குவரத்து தடைப்படும் சந்தர்ப்பங்களில், இப்பகுதி மக்களும் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் பாதுகாப்பாகப் பயணிக்க இப்பயணப் பாதை மிக அவசியமானது என்பதால், இதன் திருத்தப் பணிகள் சிறந்த தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் அனைத்துத் திருத்த வேலைகளும் முழுமையாக நிறைவடைந்து, மக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்திற்காக இப்பதுகாப்புப் பாதை புதன்கிழமையிலிருந்து மீண்டும் (05.11.2026) மக்கள் பாவனைக்காக மீள பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
சந்திவெளி - திகிலிவெட்டை படகுப்பாதை சேவை மீண்டும் ஆரம்பம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு திருத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சந்திவெளி - திகிலிவெட்டை படகுப்பாதை சேவை மீண்டும் புதன்கிழமை (05.11.2026) முதல் வழைமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சு.சுதாகரன் தெரிவித்தார்.பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த நாட்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திவெளி திகிலிவெட்டை படகுப்பாதை சேவை திருத்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்திவெளி - திகிலிவெட்டை படகுப்பாதையின் திருத்தப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.இத்திருத்தப் பணிகள் பிரதேச சபையின் நிதி மற்றும் தவிசாளர் சு.சுதாகரன் அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு பாதையின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளன.இப்பதைப் பயணத்தில் மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம். இப்பாதையில் தினமும் பயணம் செய்யும் மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பே எமக்கு மிகவும் இன்றியமையாதது.மக்கள் பாதுகாப்புடன் தொடர்புடைய இப்பணியில் எவ்வித விபத்துக்களோ அல்லது ஆபத்துக்களோ ஏற்படாத வண்ணம், நேரடி கண்காணிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் தவிசாளர் என்ற ரீதியில் எனக்கே முழுப்பொறுப்பு உள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் இதில் இட்டுள்ளேன். எதிர்வருகின்ற வெள்ளம் போன்ற அனர்த்த காலங்களில் கிரான் பாலத்தினூடான போக்குவரத்து தடைப்படும் சந்தர்ப்பங்களில், இப்பகுதி மக்களும் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் பாதுகாப்பாகப் பயணிக்க இப்பயணப் பாதை மிக அவசியமானது என்பதால், இதன் திருத்தப் பணிகள் சிறந்த தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த வகையில் அனைத்துத் திருத்த வேலைகளும் முழுமையாக நிறைவடைந்து, மக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்திற்காக இப்பதுகாப்புப் பாதை புதன்கிழமையிலிருந்து மீண்டும் (05.11.2026) மக்கள் பாவனைக்காக மீள பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.