• Nov 05 2026

பொலிஸ் திணைக்களத்திற்குள்ளேயே இத்தனை குற்றவாளிகளா? வெளியான உண்மை என்ன?

Chithra / Nov 5th 2026, 10:48 am
image


போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் தகுதியற்ற உத்தியோகத்தர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவ்வாறான உத்தியோகத்தர்களை அடையாளம் கண்டு சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 233 சிறுமிகள் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவது குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


பொலிஸ் திணைக்களத்திற்குள்ளேயே இத்தனை குற்றவாளிகளா வெளியான உண்மை என்ன போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் தகுதியற்ற உத்தியோகத்தர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவ்வாறான உத்தியோகத்தர்களை அடையாளம் கண்டு சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.அத்துடன், 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 233 சிறுமிகள் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 'ஐஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவது குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement