• Nov 06 2026

சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல்!

Ziya / Nov 5th 2026, 4:55 pm
image

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் தலைக்கவசமின்றி ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2026.11.03ஆம் திகதி சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிய பெற்றோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து பொதுமக்களுக்கு ஐந்து முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.


அதன்படி,சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை வேகமாகச் செலுத்துவதைத் தவிர்த்தல்,இரண்டு பேருக்கு மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதைத் தவிர்த்தல்,சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதைத் தவிர்த்தல்,போக்குவரத்து விதிகளையும், போக்குவரத்துப் பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மதித்து வாகனம் செலுத்துதல்,கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்- ஏனையோருக்குத் தொந்தரவு விளைவிக்கும் வகையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதைத் தவிர்த்தல்.


மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படக்கூடிய இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து, சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


குறித்த அறிவித்தல் 2026.11.04ஆம் திகதி பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் அல் ஹாஜ் எம்.எல். அப்துல் மஜீத் JP அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 

சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் தலைக்கவசமின்றி ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2026.11.03ஆம் திகதி சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிய பெற்றோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து பொதுமக்களுக்கு ஐந்து முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.அதன்படி,சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை வேகமாகச் செலுத்துவதைத் தவிர்த்தல்,இரண்டு பேருக்கு மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதைத் தவிர்த்தல்,சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதைத் தவிர்த்தல்,போக்குவரத்து விதிகளையும், போக்குவரத்துப் பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மதித்து வாகனம் செலுத்துதல்,கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்- ஏனையோருக்குத் தொந்தரவு விளைவிக்கும் வகையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதைத் தவிர்த்தல்.மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படக்கூடிய இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து, சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறும் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.குறித்த அறிவித்தல் 2026.11.04ஆம் திகதி பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் அல் ஹாஜ் எம்.எல். அப்துல் மஜீத் JP அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement