தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கந்தளாய் குளத்திற்கு வந்து சேரும் நீரை கட்டுப்படுத்துவதற்காக கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் நான்கு வான் கதவுகளை இன்று திறந்து வைத்தார்.
தற்போது குளத்திலுள்ள நீர்மட்டத்தை குறைக்கும் வகையிலும், கந்தளாய் குளத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் குளத்தின் 10 மதகுகளில் நான்கு மதகுகள் தலா நான்கு அடி திறக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாகவும்,
அதில் இருந்து வெளியேறும் தண்ணீரின் கொள்ளளவு வினாடிக்கு 700 கன அடி என்றும் நீர்பாசன பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகளும் திறப்பு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கந்தளாய் குளத்திற்கு வந்து சேரும் நீரை கட்டுப்படுத்துவதற்காக கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் நான்கு வான் கதவுகளை இன்று திறந்து வைத்தார்.தற்போது குளத்திலுள்ள நீர்மட்டத்தை குறைக்கும் வகையிலும், கந்தளாய் குளத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கந்தளாய் குளத்தின் 10 மதகுகளில் நான்கு மதகுகள் தலா நான்கு அடி திறக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாகவும், அதில் இருந்து வெளியேறும் தண்ணீரின் கொள்ளளவு வினாடிக்கு 700 கன அடி என்றும் நீர்பாசன பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.