• Jan 11 2025

கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

Chithra / Jan 10th 2025, 7:24 am
image

 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் (8) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணம் - காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.


கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்  இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் (8) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணம் - காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement