• Sep 20 2024

10 லட்சம் செலவு - பழைய வாகன உதிரிகள் கொண்டு மாபெரும் வீணை..அசர வைத்த கலைஞர்கள்! samugammedia

Tamil nila / Apr 10th 2023, 6:39 pm
image

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உலகின் மாபெரும் வீணை சின்னத்தை கலைஞர்கள் 6 மாதத்தில் உருவாக்கியுள்ளனர். பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் உலோக கழிவுகளைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருப்பது தான் சிறப்புக்குரிய அம்சமாகும். கழிவுகளில் இருந்து அதிசயம் என்று சின்னத்தின் தூண் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினருக்கு இந்தியக் கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உலோக கழிவுகளை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதை வலியுறுத்தியும் இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது. வீணை மொத்தம் 28 அடி நீளம் கொண்டதாக இருக்கிறது. 

10 அடி அகலம் மற்றும் 12 அடி உயரம் உடையதாக உள்ளது. இந்த வீணையை தயாரிக்க மொத்தம் ரூ.10 லட்சம் செலவாகியுள்ளது. உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட வீணை சின்னத்தில் இதுவே மிகப் பெரியதாகும் என்று கலைஞர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

என்னென்ன பாகங்கள் பயன்படுத்தப்பட்டன : பழைய வாகனங்களில் உள்ள பியரிங்க்ஸ், செயின்கள், ஒயர் மற்றும் இதர பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 15 கலைஞர்கள் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். 

கலைஞர்களில் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “இந்த வீணையானது ‘கழிவுகளில் இருந்து கலைப்பொருள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலோக கழிவுகளை திரட்டுவது, வீணைக்கான டிசைன் செய்வது என்று கடந்த 6 மாதங்களில் 15 கலைஞர்கள் எங்கள் உழைப்பை கொடுத்துள்ளோம். கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட மாபெரும் வீணை தயார் ஆகியிருக்கிறது’’ என்று கூறினார். 

நம் தேசத்தின் மதிப்புமிக்க கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். போபாலில் உள்ள டிடி நகர் அருகே பிளாட்டினம் பிளாசா பகுதியில் இந்த வீணை நிறுவப்பட்டுள்ளது.

நகரப் பகுதியில் நிறுவியிருப்பதால், ஏராளமான பொதுமக்கள் இதனை பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வசதிக்காக நல்ல வியூ பாயிண்ட் கொண்ட செல்ஃபி மேடை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கண்கவர் ஒளி அமைப்புகள் : வீணையை சுற்றியிலும் கண்கவர் ஒளிவிளக்கு அமைப்புகள், மென்மையான இசை போன்றவற்றை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவின் தலைவராக பவான் தேஷ்பாண்டே செயல்படுகிறார். ஏற்கனவே 3 டன் உலோக கழிவுகளைக் கொண்டு மாபெரும் ரேடியோ உருவாக்கிய புகழ் இவரைச் சேரும். அது மட்டுமல்லாமல் போபால் நகர் பகுதி முழுவதுமே ஏதோ ஒரு வகையில் அழகான சின்னங்களை இவர்கள் வடிவமைப்பு செய்திருக்கின்றனர்.

ஒவ்வொரு சின்னங்களும் நுணுக்கமான கலை அமைப்புகளை கொண்டதாக இருக்கின்றன. அதையொட்டி பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் புகழ் பெற்ற குழுவாக இந்த கலைஞர்கள் இருந்து வருகின்றனர்.

10 லட்சம் செலவு - பழைய வாகன உதிரிகள் கொண்டு மாபெரும் வீணை.அசர வைத்த கலைஞர்கள் samugammedia மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உலகின் மாபெரும் வீணை சின்னத்தை கலைஞர்கள் 6 மாதத்தில் உருவாக்கியுள்ளனர். பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் உலோக கழிவுகளைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டிருப்பது தான் சிறப்புக்குரிய அம்சமாகும். கழிவுகளில் இருந்து அதிசயம் என்று சின்னத்தின் தூண் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.இளம் தலைமுறையினருக்கு இந்தியக் கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உலோக கழிவுகளை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதை வலியுறுத்தியும் இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது. வீணை மொத்தம் 28 அடி நீளம் கொண்டதாக இருக்கிறது. 10 அடி அகலம் மற்றும் 12 அடி உயரம் உடையதாக உள்ளது. இந்த வீணையை தயாரிக்க மொத்தம் ரூ.10 லட்சம் செலவாகியுள்ளது. உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட வீணை சின்னத்தில் இதுவே மிகப் பெரியதாகும் என்று கலைஞர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.என்னென்ன பாகங்கள் பயன்படுத்தப்பட்டன : பழைய வாகனங்களில் உள்ள பியரிங்க்ஸ், செயின்கள், ஒயர் மற்றும் இதர பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 15 கலைஞர்கள் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கலைஞர்களில் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “இந்த வீணையானது ‘கழிவுகளில் இருந்து கலைப்பொருள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.உலோக கழிவுகளை திரட்டுவது, வீணைக்கான டிசைன் செய்வது என்று கடந்த 6 மாதங்களில் 15 கலைஞர்கள் எங்கள் உழைப்பை கொடுத்துள்ளோம். கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட மாபெரும் வீணை தயார் ஆகியிருக்கிறது’’ என்று கூறினார். நம் தேசத்தின் மதிப்புமிக்க கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். போபாலில் உள்ள டிடி நகர் அருகே பிளாட்டினம் பிளாசா பகுதியில் இந்த வீணை நிறுவப்பட்டுள்ளது.நகரப் பகுதியில் நிறுவியிருப்பதால், ஏராளமான பொதுமக்கள் இதனை பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வசதிக்காக நல்ல வியூ பாயிண்ட் கொண்ட செல்ஃபி மேடை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.கண்கவர் ஒளி அமைப்புகள் : வீணையை சுற்றியிலும் கண்கவர் ஒளிவிளக்கு அமைப்புகள், மென்மையான இசை போன்றவற்றை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக பவான் தேஷ்பாண்டே செயல்படுகிறார். ஏற்கனவே 3 டன் உலோக கழிவுகளைக் கொண்டு மாபெரும் ரேடியோ உருவாக்கிய புகழ் இவரைச் சேரும். அது மட்டுமல்லாமல் போபால் நகர் பகுதி முழுவதுமே ஏதோ ஒரு வகையில் அழகான சின்னங்களை இவர்கள் வடிவமைப்பு செய்திருக்கின்றனர்.ஒவ்வொரு சின்னங்களும் நுணுக்கமான கலை அமைப்புகளை கொண்டதாக இருக்கின்றன. அதையொட்டி பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் புகழ் பெற்ற குழுவாக இந்த கலைஞர்கள் இருந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement