• Jun 16 2024

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக பலியான 10 வயது பாடசாலை மாணவி...!

Chithra / May 22nd 2024, 11:19 am
image

Advertisement

 

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில்   சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மல்கொல்ல - படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த  மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும்  நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக பலியான 10 வயது பாடசாலை மாணவி.  புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில்   சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.மல்கொல்ல - படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த  மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும்  நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement