• Aug 29 2026

போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 100 பேர் உயிரிழப்பு

Chithra / Aug 29th 2026, 11:24 am
image


போதைப்பொருள் மற்றும் மதுபானப் பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


முழு நாடுமே ஒன்றிணைந்து தேசிய செயற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.


இலங்கையில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணிகளில் புகைப்பிடித்தல் முக்கிய இடத்தை வகிப்பதாகத் தெரிவித்த அவர், மதுபானப் பாவனை காரணமாக மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார்.


அதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கான ஆரம்பப் புள்ளியாக சட்டபூர்வமாகக் கிடைக்கும் போதைப்பொருட்களான சிகரெட் மற்றும் மதுபானம் அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஆய்வுகளின் அடிப்படையில், ஹெரோயின் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அதற்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் அதற்கு முன்னர் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் நாளாந்தம் அதிகளவானோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி உயிரிழப்பதாகவும், ஏனைய போதைப்பொருட்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பில் முழுமையான ஆய்வுத் தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கப்பெறும் மதிப்பீடுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.


இதன்படி, ஒரு சாதாரண நாளில் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாவனைகளால் உயிரிழப்பதாக கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.


போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 100 பேர் உயிரிழப்பு போதைப்பொருள் மற்றும் மதுபானப் பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.முழு நாடுமே ஒன்றிணைந்து தேசிய செயற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.இலங்கையில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணிகளில் புகைப்பிடித்தல் முக்கிய இடத்தை வகிப்பதாகத் தெரிவித்த அவர், மதுபானப் பாவனை காரணமாக மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார்.அதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கான ஆரம்பப் புள்ளியாக சட்டபூர்வமாகக் கிடைக்கும் போதைப்பொருட்களான சிகரெட் மற்றும் மதுபானம் அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆய்வுகளின் அடிப்படையில், ஹெரோயின் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அதற்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் அதற்கு முன்னர் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் நாளாந்தம் அதிகளவானோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி உயிரிழப்பதாகவும், ஏனைய போதைப்பொருட்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பில் முழுமையான ஆய்வுத் தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கப்பெறும் மதிப்பீடுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.இதன்படி, ஒரு சாதாரண நாளில் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாவனைகளால் உயிரிழப்பதாக கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement