• Aug 20 2026

டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் இருந்து விலகும் சுகாதார பரிசோதகர்கள்

Aathira / Aug 20th 2026, 11:35 am
image

இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று (20) முதல் நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு கூடிய சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாளை (21) நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த முடிவுகள் தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் இருந்து விலகும் சுகாதார பரிசோதகர்கள் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று (20) முதல் நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று (19) இரவு கூடிய சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், நாளை (21) நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.இந்த முடிவுகள் தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement