• Dec 27 2024

2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 60 பேர் உயிரிழப்பு

Chithra / Dec 25th 2024, 7:39 am
image

 

2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

"அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ஆனால் இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை. 

இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். அதன் முடிவுகளை பார்க்க முடியும். என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 60 பேர் உயிரிழப்பு  2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.இதேவேளை, மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்."அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ஆனால் இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை. இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். அதன் முடிவுகளை பார்க்க முடியும். என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement