• Aug 23 2025

வீதியை விட்டு விலகி குளக்கட்டின் கீழ் பாய்ந்த ஓட்டோ! உயிர் சேதமின்றி தப்பிய பயணிகள்!

shanuja / Aug 22nd 2025, 9:45 pm
image

முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குளக்கட்டின் கீழே பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டில் இன்று (22) மதியம் 

இடம்பெற்றுள்ளது.


மாடசாமி ஆலய வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி தடம்புரண்டதில் விபத்திற்குள்ளாகியுள்ளது. 


முச்சக்கரவண்டி தடம்புரண்டும் அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிர்சேதமும் 

ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும் வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 


அதன்பின்னர்  குளக்கட்டின் கீழே வீழ்ந்த முச்சக்கரவண்டி இளைஞர்களின் உதவியுடன்

மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியை விட்டு விலகி குளக்கட்டின் கீழ் பாய்ந்த ஓட்டோ உயிர் சேதமின்றி தப்பிய பயணிகள் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குளக்கட்டின் கீழே பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டில் இன்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது.மாடசாமி ஆலய வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி தடம்புரண்டதில் விபத்திற்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி தடம்புரண்டும் அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதன்பின்னர்  குளக்கட்டின் கீழே வீழ்ந்த முச்சக்கரவண்டி இளைஞர்களின் உதவியுடன்மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement