நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்.
சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல.
குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமம்; ரணிலின் கைது தொடர்பில் அநுர அரசு அதிரடி நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.