• Aug 22 2025

அதிகாரிகள் போல் நடித்து வரும் தொலைபேசி அழைப்புகள் - நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Aug 22nd 2025, 11:04 am
image

வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் போல் நடித்து மோசடியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

மோசடி தொலைபேசி அழைப்புக்களில், சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, குறித்த வணிக நிறுவன உரிமையாளர்கள், மோசடியாளர்கள் வழங்கும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பு செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுபோன்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இவ்வாறான மோசடிக்கு இரையாக வேண்டாம் என  நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

மோசடி அழைப்புகள் வந்தால் 1977 என்ற இலக்கத்திற்கு அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை, வணிக உரிமையாளர்களிடம் கேட்டுள்ளது.

அதிகாரிகள் போல் நடித்து வரும் தொலைபேசி அழைப்புகள் - நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் போல் நடித்து மோசடியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.மோசடி தொலைபேசி அழைப்புக்களில், சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, குறித்த வணிக நிறுவன உரிமையாளர்கள், மோசடியாளர்கள் வழங்கும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பு செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுபோன்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இவ்வாறான மோசடிக்கு இரையாக வேண்டாம் என  நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.மோசடி அழைப்புகள் வந்தால் 1977 என்ற இலக்கத்திற்கு அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை, வணிக உரிமையாளர்களிடம் கேட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement