• Aug 22 2025

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30 இல் போராட்டம்; வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம் தெரிவிப்பு!

shanuja / Aug 22nd 2025, 3:42 pm
image

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 



கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது   சங்க அலுவலகத்தில்  

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா கலாரஞ்சினி  இதனைத் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  எதிர்வரும் முப்பதாம் திகதி  வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும்  கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 


செம்மணி புதைகுழி  தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும்.


வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஒன்று திரள  ஓரணியில் திரண்டு தங்களுக்கு நீதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30 இல் போராட்டம்; வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம் தெரிவிப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது   சங்க அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா கலாரஞ்சினி  இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  எதிர்வரும் முப்பதாம் திகதி  வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும்  கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி புதைகுழி  தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும்.வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஒன்று திரள  ஓரணியில் திரண்டு தங்களுக்கு நீதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement