• Aug 22 2025

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்!

shanuja / Aug 22nd 2025, 4:05 pm
image

பாகிஸ்தான் அரசாங்கம் , இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது.


காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.


இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7 ஆம் திகதி இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்'  மூலம் தாக்கி அழித்தது. 


இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 



இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. 

இதற்குப் பதிலடியாக, பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்களும் இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்தியத் தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 23 வரை நீட்டித்துள்ளது.

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசாங்கம் , இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7 ஆம் திகதி இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்'  மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. இதற்குப் பதிலடியாக, பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்களும் இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்தியத் தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.இந்நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 23 வரை நீட்டித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement