• Mar 05 2026

‘டித்வா’ வால் அனாதையான 103 சிறுவர்கள்; பொறுப்பேற்க பலரும் முன்வந்துள்ளதாக தகவல்

Aathira / Feb 7th 2026, 1:24 pm
image

‘டித்வா’ காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் நாட்டில் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 

பதுளை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தக் கவலைக்கிடமான நிலை குறித்து விரிவாக விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில்,

இந்தச் சிறுவர்களின் பராமரிப்பு, கல்வி மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

பெற்றோரை இழந்த சிறுவர்களை பொறுப்பேற்க பலரும் முன்வந்துள்ளதாகவும், எனினும் அதற்கான நடவடிக்கைகள் முறையான சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு மையங்கள் போதியளவில் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், இணையவழி வன்முறைகள் அதிகரிப்பதும், பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் மாவட்டமாக பதுளை காணப்படுவதும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

அத்துடன், இலங்கையில் அதிகளவான சிறுவர் குற்றங்கள் பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பகுதியில் பதிவாகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘டித்வா’ வால் அனாதையான 103 சிறுவர்கள்; பொறுப்பேற்க பலரும் முன்வந்துள்ளதாக தகவல் ‘டித்வா’ காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் நாட்டில் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தக் கவலைக்கிடமான நிலை குறித்து விரிவாக விளக்கினார்.மேலும் அவர் கூறுகையில்,இந்தச் சிறுவர்களின் பராமரிப்பு, கல்வி மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பெற்றோரை இழந்த சிறுவர்களை பொறுப்பேற்க பலரும் முன்வந்துள்ளதாகவும், எனினும் அதற்கான நடவடிக்கைகள் முறையான சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு மையங்கள் போதியளவில் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இணையவழி வன்முறைகள் அதிகரிப்பதும், பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் மாவட்டமாக பதுளை காணப்படுவதும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.அத்துடன், இலங்கையில் அதிகளவான சிறுவர் குற்றங்கள் பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பகுதியில் பதிவாகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement