• Mar 22 2025

திருமலையில் 103 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட தகுதி..!

Sharmi / Mar 21st 2025, 8:40 am
image

எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளிக்கும் காலம் நேற்று (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 126 அரசியல் கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கையளித்திருந்தன. 

இதில் 23 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 103 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான WG.M.ஹேமந்த குமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை உள்ளிட்ட 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கான 129 வட்டாரங்களில் 136 பேர் வட்டார ரீதியாகவும் 123 பேர் விகிதாசார அடிப்படையிலும் மொத்தமாக 259 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்காக 103 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளனர்.


திருமலையில் 103 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட தகுதி. எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளிக்கும் காலம் நேற்று (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 126 அரசியல் கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கையளித்திருந்தன. இதில் 23 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 103 அரசியல் கட்சிகளினதும், 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான WG.M.ஹேமந்த குமார தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை உள்ளிட்ட 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கான 129 வட்டாரங்களில் 136 பேர் வட்டார ரீதியாகவும் 123 பேர் விகிதாசார அடிப்படையிலும் மொத்தமாக 259 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 103 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement