• Nov 22 2024

விஷ ஊசியினால் இறந்த 103 போராளிகள் - ஆதாரங்களை பகிரங்கப்படுத்துமாறு சிறீதரனிடம் கோரிக்கை

Chithra / Feb 8th 2024, 3:10 pm
image


கடந்த காலத்தில் 103 போராளிகள் விஷ ஊசியினால் இறந்தார்கள் என்று தெரிவித்திருந்தீர்கள். இந்நிலையில் பாதுகாப்பான சூழலில் நீங்கள் இருக்கும் இந்தப் பொன்னான தருணத்தில் உங்களிடம் இருக்கும் விஷ ஊசி தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த முன்வருவீர்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம்  Dr.முரளி வல்லிபுரநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,

மதிப்புக்குரிய தமிழரசு கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் நீங்கள் வெற்றி  பெற்றமைக்கு எனது வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேவேளை தமிழர்களின் அதிகளவு வாக்குகளை பெறும் கட்சியின் தலைவராக நீங்கள் பொறுப்பு எடுக்கும் நிலையில் தமிழினத்தின்  தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள் என்று தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். 

இந்த நிலையில் கடந்த காலத்தில் நீங்கள் சில விடயங்களில் செயல்பட்ட விதம் குறித்து தெளிவுபடுத்துவது அனைவரது சந்தேகங்களையும் நீக்குவதோடு எதிர்காலத்தில் உங்களுடைய செயல்பாடுகளுக்கான ஆதரவையும் அதிகரிக்கும்.

1.  கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக்குள நீர் ஒவ்வொரு வருடமும் வான் பாய்ந்து கடலுக்குள் வீணாக செல்வதை அனைவரும் அறிவோம் என்பதுடன் தொழில் சார் வல்லுநர்கள் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு குடிநீராக வழங்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்கள். 

2023 இல் கூட பெருமளவு நீர் இரணைமடுவில் இருந்து வான் பாய்ந்து கடலுக்குள் சென்று வீணாகியது.  ஆனால் நீங்கள் ‘இரணைமடு  தண்ணீரை யாழ் மாவட்டத்திற்கு வழங்க முடியாது, கிளிநொச்சி மக்களுக்கே அந்த நீர் போதாது’ என்பதே  உங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்று தொடர்ச்சியாக கூறி வந்துள்ளதுடன் யாழ்ப்பாணத்துக்கு நீரை வழங்க  மாற்று திட்டமொன்றை தேட வேண்டும் என்றும்   கருத்துத்  தெரிவித்து இருந்தீர்கள். 

இப்போது தமிழரசுக் கட்சியின் தேசிய தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்கும்  குடிநீரை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பை நீங்கள் கொண்டிருக்கும் வேளையில் தங்களுடைய தற்போதைய நிலைப்பாட்டையும்  மாற்று திட்டத்தையும்  அறிய ஆவலாக இருக்கிறோம்.

2. நீங்கள் கடந்த காலத்தில் 103 போராளிகள் விஷ ஊசியினால் இறந்தார்கள் என்றும் இன்னும் பலர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் உங்களிடம் இருப்பதாகவும் சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டால் இதை நிரூபிப்பேன் என்று தெரிவித்து இருந்தீர்கள். 

விஷ ஊசி முன்னாள் போராளிகளுக்கு ஏற்றப்பட்டதாக நீங்கள் தெரிவித்த கருத்தால் பல முன்னாள் போராளிகள் குறிப்பாக பெண்கள்  திருமண பந்தத்தில் இணைய முடியாமல் சமூகத்தினால் களங்கப்படுத்தப்பட்டு  (stigma) நோயாளிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.  

முன்னாள் போராளிகளை பரிசோதித்த நானும் ஏனைய மருத்துவ நிபுணர்களும் விஷ ஊசி ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் உங்களிடம் இருப்பதாக தெரிவித்த ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

தற்போது தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  பிரித்தானிய தூதுவர் உட்பட சர்வதேச தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடி கருத்துக்களை தெரிவிக்கும் பாதுகாப்பான சூழலில் நீங்கள் இருக்கும் இந்தப் பொன்னான தருணத்தில் உங்களிடம் இருக்கும் விஷ ஊசி தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த முன்வருவீர்களா?

3. தமிழரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இடம்பெறும் போது சிவசேனை சச்சிதானந்தன் முதல் இந்தியாவின் மேளத்துக்கு தாளம் போடுபவர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார்கள். 

ஆனால் இந்தியா ‘13ம் திருத்தத்தில் கூறப்பட்ட  அதிகாரப் பகிர்வுக்கு அப்பால் இலங்கையில் தமிழருக்கு எதையும் வழங்க தயாரில்லை’ என்பதை தொடர்ந்து தெரிவிக்கும் நிலையிலும்  நீங்கள் தமிழரசுக் கட்சியின் ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி  தீர்வு’ என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது ஈழத்து தமிழ் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி உள்ளது. 

ஆயினும் அந்த தீர்வை அடைவதற்கான உபாயம் மீண்டும் ஒரு தடவை இன்னொரு இளைய தலைமுறை தமிழர்களை உணர்ச்சி வசப்படுத்தி இரத்தக் களரியை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. 

ஏற்கெனவே எனது குடும்பம் உட்பட பல தமிழர் குடும்பங்கள் உயிரிழப்புக்களையும் பேரழிவுகளையும்  சந்தித்து பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஈழத்தமிழர்களின் குடித்தொகை நலிந்து முதலாவது  சிறுபான்மையின நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மையினராகும் பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.  

இந்த நிலையில் உசுப்பேத்தும் அரசியலை விடுத்து ஈழத் தமிழர்களை பலப்படுத்தி சமஷ்டி தீர்வை அடைவதற்கு உங்களின் உபாய மார்க்கம் அல்லது வழி வரைபடம் என்ன என்பதை தமிழர்கள் அனைவரும் அறிய  விழைகிறோம்.   என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விஷ ஊசியினால் இறந்த 103 போராளிகள் - ஆதாரங்களை பகிரங்கப்படுத்துமாறு சிறீதரனிடம் கோரிக்கை கடந்த காலத்தில் 103 போராளிகள் விஷ ஊசியினால் இறந்தார்கள் என்று தெரிவித்திருந்தீர்கள். இந்நிலையில் பாதுகாப்பான சூழலில் நீங்கள் இருக்கும் இந்தப் பொன்னான தருணத்தில் உங்களிடம் இருக்கும் விஷ ஊசி தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த முன்வருவீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம்  Dr.முரளி வல்லிபுரநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,மதிப்புக்குரிய தமிழரசு கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அவர்களே தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் நீங்கள் வெற்றி  பெற்றமைக்கு எனது வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளை தமிழர்களின் அதிகளவு வாக்குகளை பெறும் கட்சியின் தலைவராக நீங்கள் பொறுப்பு எடுக்கும் நிலையில் தமிழினத்தின்  தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள் என்று தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த நிலையில் கடந்த காலத்தில் நீங்கள் சில விடயங்களில் செயல்பட்ட விதம் குறித்து தெளிவுபடுத்துவது அனைவரது சந்தேகங்களையும் நீக்குவதோடு எதிர்காலத்தில் உங்களுடைய செயல்பாடுகளுக்கான ஆதரவையும் அதிகரிக்கும்.1.  கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக்குள நீர் ஒவ்வொரு வருடமும் வான் பாய்ந்து கடலுக்குள் வீணாக செல்வதை அனைவரும் அறிவோம் என்பதுடன் தொழில் சார் வல்லுநர்கள் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு குடிநீராக வழங்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்கள். 2023 இல் கூட பெருமளவு நீர் இரணைமடுவில் இருந்து வான் பாய்ந்து கடலுக்குள் சென்று வீணாகியது.  ஆனால் நீங்கள் ‘இரணைமடு  தண்ணீரை யாழ் மாவட்டத்திற்கு வழங்க முடியாது, கிளிநொச்சி மக்களுக்கே அந்த நீர் போதாது’ என்பதே  உங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்று தொடர்ச்சியாக கூறி வந்துள்ளதுடன் யாழ்ப்பாணத்துக்கு நீரை வழங்க  மாற்று திட்டமொன்றை தேட வேண்டும் என்றும்   கருத்துத்  தெரிவித்து இருந்தீர்கள். இப்போது தமிழரசுக் கட்சியின் தேசிய தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்கும்  குடிநீரை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பை நீங்கள் கொண்டிருக்கும் வேளையில் தங்களுடைய தற்போதைய நிலைப்பாட்டையும்  மாற்று திட்டத்தையும்  அறிய ஆவலாக இருக்கிறோம்.2. நீங்கள் கடந்த காலத்தில் 103 போராளிகள் விஷ ஊசியினால் இறந்தார்கள் என்றும் இன்னும் பலர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் உங்களிடம் இருப்பதாகவும் சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டால் இதை நிரூபிப்பேன் என்று தெரிவித்து இருந்தீர்கள். விஷ ஊசி முன்னாள் போராளிகளுக்கு ஏற்றப்பட்டதாக நீங்கள் தெரிவித்த கருத்தால் பல முன்னாள் போராளிகள் குறிப்பாக பெண்கள்  திருமண பந்தத்தில் இணைய முடியாமல் சமூகத்தினால் களங்கப்படுத்தப்பட்டு  (stigma) நோயாளிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.  முன்னாள் போராளிகளை பரிசோதித்த நானும் ஏனைய மருத்துவ நிபுணர்களும் விஷ ஊசி ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் உங்களிடம் இருப்பதாக தெரிவித்த ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போது தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  பிரித்தானிய தூதுவர் உட்பட சர்வதேச தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடி கருத்துக்களை தெரிவிக்கும் பாதுகாப்பான சூழலில் நீங்கள் இருக்கும் இந்தப் பொன்னான தருணத்தில் உங்களிடம் இருக்கும் விஷ ஊசி தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த முன்வருவீர்களா3. தமிழரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இடம்பெறும் போது சிவசேனை சச்சிதானந்தன் முதல் இந்தியாவின் மேளத்துக்கு தாளம் போடுபவர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆனால் இந்தியா ‘13ம் திருத்தத்தில் கூறப்பட்ட  அதிகாரப் பகிர்வுக்கு அப்பால் இலங்கையில் தமிழருக்கு எதையும் வழங்க தயாரில்லை’ என்பதை தொடர்ந்து தெரிவிக்கும் நிலையிலும்  நீங்கள் தமிழரசுக் கட்சியின் ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி  தீர்வு’ என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது ஈழத்து தமிழ் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி உள்ளது. ஆயினும் அந்த தீர்வை அடைவதற்கான உபாயம் மீண்டும் ஒரு தடவை இன்னொரு இளைய தலைமுறை தமிழர்களை உணர்ச்சி வசப்படுத்தி இரத்தக் களரியை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. ஏற்கெனவே எனது குடும்பம் உட்பட பல தமிழர் குடும்பங்கள் உயிரிழப்புக்களையும் பேரழிவுகளையும்  சந்தித்து பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஈழத்தமிழர்களின் குடித்தொகை நலிந்து முதலாவது  சிறுபான்மையின நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மையினராகும் பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.  இந்த நிலையில் உசுப்பேத்தும் அரசியலை விடுத்து ஈழத் தமிழர்களை பலப்படுத்தி சமஷ்டி தீர்வை அடைவதற்கு உங்களின் உபாய மார்க்கம் அல்லது வழி வரைபடம் என்ன என்பதை தமிழர்கள் அனைவரும் அறிய  விழைகிறோம்.   என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement