• Apr 02 2025

புதையல் தோண்டிய தேரர் உட்பட 11 பேர் கைது..! சிக்கிய முக்கிய பொருட்கள்..!

Chithra / Jan 26th 2024, 8:23 am
image

 

அநுராதபுரம் - தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் தேரர் உட்பட 11 பேர் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து பெக்கோ இயந்திரம், டிரக்டர், கார் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் தேரராவார்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதையல் தோண்டிய தேரர் உட்பட 11 பேர் கைது. சிக்கிய முக்கிய பொருட்கள்.  அநுராதபுரம் - தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் தேரர் உட்பட 11 பேர் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து பெக்கோ இயந்திரம், டிரக்டர், கார் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சந்தேக நபர்களில் ஒருவர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் தேரராவார்.கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement