• Nov 23 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 11,864 பேர் பாதிப்பு- 15 பேர் உயிரிழப்பு 23 பேர் காயம்...!

Sharmi / Jun 3rd 2024, 11:38 am
image

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் , இதுவரை 3,727 குடும்பங்களை சேர்ந்த 11,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(03) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன. 

குறிப்பாக  திடீர் வெள்ளப்பெருக்கால் தென் மாகாணத்திலேயே அதிகளவு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

அதாவது, காலி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.  1,384 குடும்பங்களை சேர்ந்த 4,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  06 வீடுகள் முழுமையாகவும் , 1369 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

மேலும் மாத்தறை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 588 குடும்பங்களை சேர்ந்த 2,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  01வீடு முழுமையாகவும் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.  10 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 01 வீடு முழுமையாகவும் 156 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து மேல் மாகாணம், களுத்துறை மாவட்டத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், 347 குடும்பங்களை சேர்ந்த 1,284பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கம்பகா மாவட்டத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 78 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 01 வீடு முழுமையாகவும் 617 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன

கொழும்பு மாவட்டத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 14 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 01 வீடு முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 43 குடும்பங்களை சேர்ந்த 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 02 பேர் காயமடைந்துள்ளனர். 232 குடும்பங்களை சேர்ந்த 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில்  02 பேர் காயமடைந்துள்ளனர். 48 குடும்பங்களை சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வட மத்திய மாகாணம் பொலனறுவை  மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 160 குடும்பங்களை சேர்ந்த 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 155 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஊவா மாகாணம் மொனராகலை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  சேர்ந்த 04பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் அடைமழை மற்றும் காற்றால் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்  352 குடும்பங்களை சேர்ந்த 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்தில் 09 குடும்பங்களை சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 வீடுகள் முழுமையாகவும் 18 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 437 குடும்பங்களை சேர்ந்த 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 08 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 11,864 பேர் பாதிப்பு- 15 பேர் உயிரிழப்பு 23 பேர் காயம். இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் , இதுவரை 3,727 குடும்பங்களை சேர்ந்த 11,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(03) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக  திடீர் வெள்ளப்பெருக்கால் தென் மாகாணத்திலேயே அதிகளவு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.அதாவது, காலி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.  1,384 குடும்பங்களை சேர்ந்த 4,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  06 வீடுகள் முழுமையாகவும் , 1369 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் மாத்தறை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 588 குடும்பங்களை சேர்ந்த 2,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  01வீடு முழுமையாகவும் 569 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.  10 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 01 வீடு முழுமையாகவும் 156 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அதனைத் தொடர்ந்து மேல் மாகாணம், களுத்துறை மாவட்டத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், 347 குடும்பங்களை சேர்ந்த 1,284பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கம்பகா மாவட்டத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 78 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 01 வீடு முழுமையாகவும் 617 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனகொழும்பு மாவட்டத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 14 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 குடும்பங்களை சேர்ந்த 40 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 01 வீடு முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 43 குடும்பங்களை சேர்ந்த 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 02 பேர் காயமடைந்துள்ளனர். 232 குடும்பங்களை சேர்ந்த 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில்  02 பேர் காயமடைந்துள்ளனர். 48 குடும்பங்களை சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.வட மத்திய மாகாணம் பொலனறுவை  மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 160 குடும்பங்களை சேர்ந்த 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 155 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.ஊவா மாகாணம் மொனராகலை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  சேர்ந்த 04பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் அடைமழை மற்றும் காற்றால் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்  352 குடும்பங்களை சேர்ந்த 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்தில் 09 குடும்பங்களை சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 வீடுகள் முழுமையாகவும் 18 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 437 குடும்பங்களை சேர்ந்த 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 08 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement