அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, காலை 8 மணி முதல் இரவு 8 வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு நகரத்திற்குள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு 1 முதல் 15 வரை, கோட்டை, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவை, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, ஐடிஎச், மகரகம, தெஹிவல, கல்கிஸ்ஸ, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோக தடை ஏற்படும்.
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோக தடை அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 8 மணி முதல் இரவு 8 வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, கொழும்பு நகரத்திற்குள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தவகையில், கொழும்பு 1 முதல் 15 வரை, கோட்டை, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவை, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, ஐடிஎச், மகரகம, தெஹிவல, கல்கிஸ்ஸ, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோக தடை ஏற்படும்.