• Aug 25 2025

இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா? சிஐடி விசாரணை

Aathira / Aug 25th 2025, 7:56 am
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படும் லண்டன் வால்வர்ஹாம்டன்  பல்கலைக்கழகத்தின்

பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழ் கடிதம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு  திணைக்களம்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோருக்கு இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  அவர்களால் 

2023 செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினருக்கான உத்தியோகப்பூர்வ அழைப்பு  விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

தற்போது குறித்த ஆவணம் போலியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு ரணில் விக்கிரமசிங்க சார்பில் இந்த கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது தான் இந்த சந்தேகத்திற்கான காரணம். 

மேலும் கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்கா பிரவீன் உத்தரவின் பெயரில் இந்த கடிதம் தொடர்பான விசாரணைகளை சிஐடியினர் அதிகாரபூர்வமாக  தொடங்கியுள்ளனர். 

இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா சிஐடி விசாரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படும் லண்டன் வால்வர்ஹாம்டன்  பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழ் கடிதம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு  திணைக்களம்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோருக்கு இங்கிலாந்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  அவர்களால் 2023 செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினருக்கான உத்தியோகப்பூர்வ அழைப்பு  விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது குறித்த ஆவணம் போலியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு ரணில் விக்கிரமசிங்க சார்பில் இந்த கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது தான் இந்த சந்தேகத்திற்கான காரணம். மேலும் கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்கா பிரவீன் உத்தரவின் பெயரில் இந்த கடிதம் தொடர்பான விசாரணைகளை சிஐடியினர் அதிகாரபூர்வமாக  தொடங்கியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement