• Aug 25 2025

ரணிலை பார்வையிட வருவோரை மட்டுப்படுத்த தீர்மானம்!

shanuja / Aug 24th 2025, 9:44 pm
image

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் அவரைப் பார்வையிடுவதை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன கோரியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்ப்பதற்காக பலர் வருவதால் அது அவரது உடல்நிலைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். 


இதேவேளை, கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


வயது காரணமாக அவருடைய இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாகவும் ஆனால், அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலை பார்வையிட வருவோரை மட்டுப்படுத்த தீர்மானம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் அவரைப் பார்வையிடுவதை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன கோரியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்ப்பதற்காக பலர் வருவதால் அது அவரது உடல்நிலைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.வயது காரணமாக அவருடைய இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாகவும் ஆனால், அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement