• Aug 24 2025

மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள்.! வெளியான அறிவிப்பு

Aathira / Aug 24th 2025, 6:37 pm
image

தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தபால் தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ கூறியதாவது: 

இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். மீதமுள்ள 17 கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயார்.

அதன்படி, இன்று மாலை 4.00 மணி முதல், அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.

சுமார் 6 நாட்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க  வேண்டும். அந்தந்த தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய அனைவரும் வந்து தாமதமின்றி அந்தப் பணிகளை முடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இதேவேளை, தபால் துறையினரால் முன்வைக்கப்பட்ட 19 அடிப்படை பிரச்சினைகளில் 17 பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வுகளை வகுக்குமாறு அமைச்சர் தபால் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள். வெளியான அறிவிப்பு தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தபால் தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.கலந்துரையாடல் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ கூறியதாவது: இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். மீதமுள்ள 17 கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயார்.அதன்படி, இன்று மாலை 4.00 மணி முதல், அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.சுமார் 6 நாட்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க  வேண்டும். அந்தந்த தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய அனைவரும் வந்து தாமதமின்றி அந்தப் பணிகளை முடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.இதேவேளை, தபால் துறையினரால் முன்வைக்கப்பட்ட 19 அடிப்படை பிரச்சினைகளில் 17 பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வுகளை வகுக்குமாறு அமைச்சர் தபால் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement