• Aug 25 2025

தமிழினஅழிப்புக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்; 2 ஆவது நாளாக இன்றும் முன்னெடுப்பு!

shanuja / Aug 24th 2025, 9:58 pm
image

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. 


சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்று (23) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. 


அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மக்கள் கையெழுத்துப் போராட்டம் இன்று (24) நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது .


இக்கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்டனர். 


மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும்  கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள், இளைஞர்களிடமும்   இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

தமிழினஅழிப்புக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்; 2 ஆவது நாளாக இன்றும் முன்னெடுப்பு தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்று (23) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மக்கள் கையெழுத்துப் போராட்டம் இன்று (24) நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது .இக்கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்டனர். மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும்  கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள், இளைஞர்களிடமும்   இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement