'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு - கிரானில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தியே இந்த 'நீதியின் ஓலம்' எனும் கையொப்ப போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 8.00 மணியளவில் கிரான் பிள்ளையார் ஆலய முன்றலில் மரணித்த உறவுகளை நினைவு கூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் பற்றி உரையாற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படும் புதை குழிகள் தோண்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்படடது.
எதிர்வரும் செம்ரம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி கிரானில் 'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் 'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு - கிரானில் முன்னெடுக்கப்பட்டது.தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தியே இந்த 'நீதியின் ஓலம்' எனும் கையொப்ப போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.குறித்த போராட்டம் இன்று காலை 8.00 மணியளவில் கிரான் பிள்ளையார் ஆலய முன்றலில் மரணித்த உறவுகளை நினைவு கூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் பற்றி உரையாற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படும் புதை குழிகள் தோண்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்படடது.எதிர்வரும் செம்ரம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.