இந்த ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி, இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான இதுவரை சுமார் ரூ. 700 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க தெரிவித்தார்.
நிதியைப் பெற்ற பிரதேச செயலாளர்கள் திட்டங்களை உடனடியாக செயற்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள கிராமிய அபிவிருத்தி முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்,
நடந்து வரும் அனைத்து திட்டங்களிலும் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மந்திரிநாயக்க கூறினார்.
கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக இதுவரை 700 மில்லியன் விடுவிப்பு இந்த ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி, இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான இதுவரை சுமார் ரூ. 700 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க தெரிவித்தார்.நிதியைப் பெற்ற பிரதேச செயலாளர்கள் திட்டங்களை உடனடியாக செயற்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.இதேவேளை 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள கிராமிய அபிவிருத்தி முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், நடந்து வரும் அனைத்து திட்டங்களிலும் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மந்திரிநாயக்க கூறினார்.