யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார், நீண்ட தூர துரத்தலின் பின்னர் அந்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்து நிறுத்த முயன்றபோது, சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை வேகமாக செலுத்திச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்ற நிலையில், தம்மை பொலிஸார் பின்தொடர்வதைத் தடுக்கும் நோக்கில், உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற மணலை வீதியில் சிதறவிட்டபடியே தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பொலிஸார் நீண்ட தூரம் தொடர்ந்து துரத்திச் சென்றதையடுத்து, உழவு இயந்திரத்தை வீதியோரத்தில் கைவிட்டுவிட்டு, சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், தப்பியோடிய சாரதி மற்றும் அவருடன் பயணித்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மணலை வீதியில் சிதறவிட்டபடியே தப்பியோடிய கும்பல் - யாழில் பொலிஸார் துரத்தல் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார், நீண்ட தூர துரத்தலின் பின்னர் அந்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்து நிறுத்த முயன்றபோது, சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை வேகமாக செலுத்திச் சென்றுள்ளார்.இதனைத் தொடர்ந்து பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்ற நிலையில், தம்மை பொலிஸார் பின்தொடர்வதைத் தடுக்கும் நோக்கில், உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற மணலை வீதியில் சிதறவிட்டபடியே தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், பொலிஸார் நீண்ட தூரம் தொடர்ந்து துரத்திச் சென்றதையடுத்து, உழவு இயந்திரத்தை வீதியோரத்தில் கைவிட்டுவிட்டு, சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.சம்பவ இடத்திலிருந்து உழவு இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், தப்பியோடிய சாரதி மற்றும் அவருடன் பயணித்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.