• Nov 24 2024

இலங்கையில் 12 வீதமான முதியவர்கள் அனைத்து பற்களையும் இழந்துள்ளனர்- ரமேஷ் பத்திரன தெரிவிப்பு..!!

Tamil nila / Mar 24th 2024, 7:34 am
image

நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் எனவும் வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 12 வீதமான முதியவர்கள் அனைத்து பற்களையும் இழந்துள்ளனர்- ரமேஷ் பத்திரன தெரிவிப்பு. நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் எனவும் வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement