கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன் ஆகிய பகுதிகளில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணிப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பின் மூலம் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
பனங்கண்டி பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், முரசுமோட்டை மற்றும் பரந்தன் பகுதியில் ஏ 35 பிரதான வீதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 11 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடைய பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில்அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன் ஆகிய பகுதிகளில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணிப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பின் மூலம் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.பனங்கண்டி பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், முரசுமோட்டை மற்றும் பரந்தன் பகுதியில் ஏ 35 பிரதான வீதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 11 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தடைய பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.