• Feb 20 2025

மியன்மாரில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு

Chithra / Feb 16th 2025, 7:40 am
image


மியன்மாரிலுள்ள சைபர் குற்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர். 

அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.  பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 

இதற்கிடையில், ஏனைய நால்வரும் மின்மாரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மியன்மாரில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு மியன்மாரிலுள்ள சைபர் குற்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர். அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.  பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இதற்கிடையில், ஏனைய நால்வரும் மின்மாரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement