இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவில் பதுங்கியுள்ள பல குற்றவாளிகள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வருடத்தில் இதுவரை 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று T56 துப்பாக்கிகள், 05 கைத்துப்பாக்கிகள் மற்றும் 04 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, போதைப்பொருள் நடவடிக்கை திட்டத்தின் கீழ் 16,000க்கும் அதிகமானோர் கைது
செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டில் தலைமறைவாகவுள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டம் இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதன்படி, இந்தியாவில் பதுங்கியுள்ள பல குற்றவாளிகள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.அத்துடன், இவ்வருடத்தில் இதுவரை 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மூன்று T56 துப்பாக்கிகள், 05 கைத்துப்பாக்கிகள் மற்றும் 04 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இதேவேளை, போதைப்பொருள் நடவடிக்கை திட்டத்தின் கீழ் 16,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.