மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை - மீரிகம பகுதியின் முதல் பிரிவை நிர்மாணிப்பதற்கான சீன நிதியுதவி மீண்டும் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இந்தத் திட்டம், இந்த மாதத்தில் அல்லது ஒக்டோபரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
37 கிலோமீற்றர் நீளமான இந்த வீதிப் பிரிவை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியுதவியை சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள கட்டுமானப் பணிகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கியவுடன் இரண்டரை ஆண்டுகளுக்குள் திட்டம் நிறைவடையும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் ஆரம்பம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை - மீரிகம பகுதியின் முதல் பிரிவை நிர்மாணிப்பதற்கான சீன நிதியுதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தத் திட்டம், இந்த மாதத்தில் அல்லது ஒக்டோபரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 37 கிலோமீற்றர் நீளமான இந்த வீதிப் பிரிவை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியுதவியை சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள கட்டுமானப் பணிகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கியவுடன் இரண்டரை ஆண்டுகளுக்குள் திட்டம் நிறைவடையும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.