பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று இடம்பெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.
இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிகொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பதாக யாழ் மாவட்டசெயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கின் ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
ஆளுனர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாட்ப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதாம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து வருடங்களாகியும் ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கவில்லை போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டுவருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று இடம்பெற்றது.நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிகொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பதாக யாழ் மாவட்டசெயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கின் ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.ஆளுனர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாட்ப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதாம் செலுத்துவதாக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.