கொள்ளுப்பிட்டி பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது அங்கு தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 29 முதல் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் அந்த விடுதியின் முகாமையாளராக செயற்பட்ட வடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளுப்பிட்டியில் இயங்கிய பாலியல் விடுதி முற்றுகை: 6 தாய்லாந்து பெண்கள் கைது கொள்ளுப்பிட்டி பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது அங்கு தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண்கள் 29 முதல் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் அந்த விடுதியின் முகாமையாளராக செயற்பட்ட வடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.