• Dec 17 2025

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

shanuja / Dec 17th 2025, 11:10 am
image


பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு   பாடசாலைச் சூழல் சுகாதார ரீதியாக ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார்.


இதற்கமைய கடந்த திங்கட்கிழமை(15) முதல் தொடர்ச்சியாக இன்று(17)  வரை  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 9 பாடசாலைகள்  பருவகால டித்வா புயலின் தாக்கம் காரணமாக தற்காலிகமாக விடுமுறையில் இருந்தன.


குறித்த பாடசாலை சூழலை ஆராயும் மகமாக சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள்இ டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.


இதன் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய  மாணவர்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறைபாடுகள் மற்றும் அபாய நிலைகள் இனங்காணப்பட்டதுடன்இ அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து சுத்தமான மற்றும் பாதுகாப்பான பாடசாலைச் சூழலை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம்  பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுப்பு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு   பாடசாலைச் சூழல் சுகாதார ரீதியாக ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார்.இதற்கமைய கடந்த திங்கட்கிழமை(15) முதல் தொடர்ச்சியாக இன்று(17)  வரை  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 9 பாடசாலைகள்  பருவகால டித்வா புயலின் தாக்கம் காரணமாக தற்காலிகமாக விடுமுறையில் இருந்தன.குறித்த பாடசாலை சூழலை ஆராயும் மகமாக சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள்இ டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.இதன் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய  மாணவர்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறைபாடுகள் மற்றும் அபாய நிலைகள் இனங்காணப்பட்டதுடன்இ அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து சுத்தமான மற்றும் பாதுகாப்பான பாடசாலைச் சூழலை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம்  பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement