• Sep 08 2025

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் வழங்கல்!

shanuja / Sep 8th 2025, 3:44 pm
image

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் கொடுப்பனவு உதவித்திட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 மாற்றுதிறனாளிகளுக்கான மாதம் 5000 ரூபா வீதம் ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவு காசோலை உதவிதிட்டம் இன்றையதினம் (08) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 பயனாளிகளுக்கு இன்றையதினம் ஒருவருக்கு மூன்று மாதற்குரிய காசோலைகள் 15,000 ரூபா விகிதம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மூன்று மாதங்களிற்கு 5000 ரூபா வீதம் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது. 


அத்தோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏனைய 13 பயனாளிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் வழங்கப்பட இருக்கின்றது.


சபை அமைப்பதற்கு முன்னர்  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளரினால் உள்ளூராட்சி மன்ற வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் விஷேட முன்னனுமதிகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கமைவாக வடக்கு மாகாண ஆளுனரின் அனுமதி பெறப்பட்டு இன்றையதினம் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் வழங்கல் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் கொடுப்பனவு உதவித்திட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 மாற்றுதிறனாளிகளுக்கான மாதம் 5000 ரூபா வீதம் ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவு காசோலை உதவிதிட்டம் இன்றையதினம் (08) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 பயனாளிகளுக்கு இன்றையதினம் ஒருவருக்கு மூன்று மாதற்குரிய காசோலைகள் 15,000 ரூபா விகிதம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மூன்று மாதங்களிற்கு 5000 ரூபா வீதம் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது. அத்தோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏனைய 13 பயனாளிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் வழங்கப்பட இருக்கின்றது.சபை அமைப்பதற்கு முன்னர்  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளரினால் உள்ளூராட்சி மன்ற வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் விஷேட முன்னனுமதிகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கமைவாக வடக்கு மாகாண ஆளுனரின் அனுமதி பெறப்பட்டு இன்றையதினம் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement