வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் தமது வாழ்வை மீட்கும் வகையிலான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததோடு ஆளுநரையும் சந்தித்துள்ளனர்.
கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என்றவாறு கண்ணீருடன் வடக்கு மாகாணத்தில் உள்ள
பாடசாலைகளில் சிங்கள மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு, ஹம்பகா, காலி, களுத்துறை என பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் அதிகமான வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு வடக்கின் ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கோரிக்கையடுத்து ஆசிரியர்களின் குறித்த பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
வாழ்வை மீட்க போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் உறுதியளித்த ஆளுநர் வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் தமது வாழ்வை மீட்கும் வகையிலான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததோடு ஆளுநரையும் சந்தித்துள்ளனர். கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என்றவாறு கண்ணீருடன் வடக்கு மாகாணத்தில் உள்ளபாடசாலைகளில் சிங்கள மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு, ஹம்பகா, காலி, களுத்துறை என பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் அதிகமான வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு வடக்கின் ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கோரிக்கையடுத்து ஆசிரியர்களின் குறித்த பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரிக்குள் தீர்வு கிடைக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.