• Sep 08 2025

திடீரென வீசிய பலத்த காற்றுடனான மழை ; தூக்கி வீசப்பட்ட கூரைகள் - யாழில் 12 பேர் பாதிப்பு!

shanuja / Sep 8th 2025, 6:00 pm
image

யாழில் நேற்றையதினம் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.


அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.


மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.


இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 


திடீரென நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் மக்களின் அன்றாட செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திடீரென வீசிய பலத்த காற்றுடனான மழை ; தூக்கி வீசப்பட்ட கூரைகள் - யாழில் 12 பேர் பாதிப்பு யாழில் நேற்றையதினம் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியில் சேதமடைந்துள்ளது.இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். திடீரென நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் மக்களின் அன்றாட செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement