𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟱 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (05) இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
குறித்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகமும் ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடின.
போட்டியின் முதல் இடைவேளைக்கு முன்னர் ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகம் முதலாவது கோலினை போட்டது.பின்னர் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் சிறந்த களத்தடுப்புடன் விளையாடிய கோல்ட் மைன்ட்விளையாட்டு கழகம் 2 கோல்களை போட்டு இறுதியில் (02:01) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
கோல்ட் மைன்ட்விளையாட்டு கழகம் சார்பாக ரிம்சான் மற்றும் ஆதிப் ஆகியோர் கோல்களை போட்டிருந்தனர்.
குறித்த அரை இறுதிப் போட்டிக்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக சட்டத்தரணி சன்ஜித் காதர் இப்றாகிம் கலந்து கொண்டார்.
மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு 𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟱 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (05) இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இதன் போது மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.குறித்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகமும் ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடின. போட்டியின் முதல் இடைவேளைக்கு முன்னர் ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகம் முதலாவது கோலினை போட்டது.பின்னர் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் சிறந்த களத்தடுப்புடன் விளையாடிய கோல்ட் மைன்ட்விளையாட்டு கழகம் 2 கோல்களை போட்டு இறுதியில் (02:01) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.கோல்ட் மைன்ட்விளையாட்டு கழகம் சார்பாக ரிம்சான் மற்றும் ஆதிப் ஆகியோர் கோல்களை போட்டிருந்தனர்.குறித்த அரை இறுதிப் போட்டிக்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக சட்டத்தரணி சன்ஜித் காதர் இப்றாகிம் கலந்து கொண்டார்.