1.50 கோடி ரூபா மதிப்பிலான இரு கலசங்களை பக்தர் போல் வேடமிட்டு திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லியில் ஜெயின் சமூகத்தினரின் 'தசலட்சண மகாபர்வ்' நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
தொடர்ச்சியாக 10 நாள் நடக்கும் திருவிழாவில் வைரம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்த 115 கிராம் எடையுள்ள தங்க கலசமும், 760 கிராம் எடையுள்ள தங்கத் தேங்காயும் வைக்கப்பட்டிருந்தது.
தங்கக் கலசமும் தங்கத் தேங்காயையும் அவதானித்த மர்ம நபர் ஒருவர் பக்தர் போல் வேடமிட்டுச் சென்று திருடிச் சென்றுள்ளார்.
கலசம் மற்றும் தேங்காயின் மதிப்பு 1.50 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலசமும் தேங்காயும் திருட்டுப் போனதை அவதானித்து அதிர்ச்சியடைந்த ஆலய நிர்வாகிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
சிசிரிவியில் பூஷன் வர்மா என்ற நபர் ஜெயின் சமூகத்தினரைப் போல பாரம்பரிய உடை அணிந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனையடுத்து குறித்த நபர் மீது வழக்குத் தாக்கல் செய்ததுடன் அவரை உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த கலசத்தையும் பறிமுதல் செய்தனர்.
வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கலசம், தங்கத்தேங்காய்; பக்தர் போல் வேடமிட்டு திருடிய நபர் கைது 1.50 கோடி ரூபா மதிப்பிலான இரு கலசங்களை பக்தர் போல் வேடமிட்டு திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில் ஜெயின் சமூகத்தினரின் 'தசலட்சண மகாபர்வ்' நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. தொடர்ச்சியாக 10 நாள் நடக்கும் திருவிழாவில் வைரம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்த 115 கிராம் எடையுள்ள தங்க கலசமும், 760 கிராம் எடையுள்ள தங்கத் தேங்காயும் வைக்கப்பட்டிருந்தது. தங்கக் கலசமும் தங்கத் தேங்காயையும் அவதானித்த மர்ம நபர் ஒருவர் பக்தர் போல் வேடமிட்டுச் சென்று திருடிச் சென்றுள்ளார். கலசம் மற்றும் தேங்காயின் மதிப்பு 1.50 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலசமும் தேங்காயும் திருட்டுப் போனதை அவதானித்து அதிர்ச்சியடைந்த ஆலய நிர்வாகிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிசிரிவி காட்சிகளைப் பார்வையிட்டனர்.சிசிரிவியில் பூஷன் வர்மா என்ற நபர் ஜெயின் சமூகத்தினரைப் போல பாரம்பரிய உடை அணிந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.அதனையடுத்து குறித்த நபர் மீது வழக்குத் தாக்கல் செய்ததுடன் அவரை உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த கலசத்தையும் பறிமுதல் செய்தனர்.