• Sep 08 2025

அம்பாறையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்

Chithra / Sep 8th 2025, 3:47 pm
image

 அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சம்மாந்துறை மல் ஆறாம் வீதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அப்துல் மஜீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் மல்வத்தை-புதுக்காடு பகுதியில் உள்ள காணியில் விவசாயம் செய்து வந்த நிலையில் இயற்கை உரம்(கோழி எரு) இடுவதற்கு அங்கு சென்ற நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் இடைநடுவில் அவர் மரணமடைந்திருந்தார்.

மரணமடைந்தவர் இருதய நோய்க்கு உள்ளான நிலையில் கடந்த காலங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். 

குறித்த மரணம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் முன்னெடுத்தார்.

இதன்போது, நெஞ்சு வலி காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அம்பாறையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்  அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் சம்மாந்துறை மல் ஆறாம் வீதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அப்துல் மஜீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மல்வத்தை-புதுக்காடு பகுதியில் உள்ள காணியில் விவசாயம் செய்து வந்த நிலையில் இயற்கை உரம்(கோழி எரு) இடுவதற்கு அங்கு சென்ற நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் இடைநடுவில் அவர் மரணமடைந்திருந்தார்.மரணமடைந்தவர் இருதய நோய்க்கு உள்ளான நிலையில் கடந்த காலங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். குறித்த மரணம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் முன்னெடுத்தார்.இதன்போது, நெஞ்சு வலி காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement