நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பான விசேட நடவடிக்கையின்போது, அவர்கள் கைதானதாக விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் கீழ், குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 922 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 14,000 பேரும் கைதானதாகவும் குறித்த காலப்பகுதியில் 197 சட்டவிரோத
துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,054 சாரதிகளுக்கு
எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருளுடன் 16,000 பேர் கைது நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பான விசேட நடவடிக்கையின்போது, அவர்கள் கைதானதாக விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் கீழ், குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 922 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 14,000 பேரும் கைதானதாகவும் குறித்த காலப்பகுதியில் 197 சட்டவிரோத துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,054 சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.